பல வருடங்களாக ஏ.ஆர்.ரகுமானின் நிழல் போல அவருடன் கூடவே பயணித்து வருபவர் ட்ரம்ஸ் சிவமணி. கிட்டத்தட்ட ஏ ஆர் ரகுமானின் வலது கரம் போலவே வலம் வரும் டிரம்ஸ் சிவமணி தற்போது கொட்டேஷன் கேம் என்கிற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

விவேக் கண்ணன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் பிரியாமணி, சன்னி லியோன், ஜாக்கி ஷெராஃப் மற்றும் தெய்வத்திருமகள் சாரா உள்ளிட்ட பல நடித்திருக்கின்றனர்.

இந்த படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது மும்பை மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
