HomeNewsKollywoodபிச்சைக்காரன்-2 உரிமையை கைப்பற்றிய ஸ்டார் டிவி நிறுவனம்

பிச்சைக்காரன்-2 உரிமையை கைப்பற்றிய ஸ்டார் டிவி நிறுவனம்

நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பு பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அவரை கமர்சியல் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்திய படம் பிச்சைக்காரன். அவர் இதுவரை நடித்துள்ள படங்கள் அனைத்திலும் மகுடமாக இருக்கும் இந்த பிச்சைக்காரன் படத்தை இயக்குனர் சசி இயக்கியிருந்தார்.

அந்தப்படம் வெளியாகி சில வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிச்சைக்காரன்-2 என்கிற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் டிவி நெட்வொர்க் கைப்பற்றியுள்ளது. வரும் 2023 சம்மர் ரிலீஸ் ஆக இந்த படம் வெளியாக இருக்கிறது. அது குறித்த அதிகாரப்பூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த படம் குறித்து சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியான போதே பிகிலி, ஆண்டி பிகிலி என்கிற போஸ்டர்கள் வெளியாகி இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments