நடிகர் விஜய்சேதுபதியை பொருத்தவரை தமிழ் சினிமாவில் மற்ற எந்த ஹீரோக்களும் செய்ய தயங்கும் விஷயத்தை மிக சாதாரணமாக செய்து வருகிறார். குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதுடன் வயதான வேடங்களிலும் நடிக்க அவர் தயங்குவதில்லை.

அந்த வகையில் இவர் இப்படித்தான் என ஒரு வட்டத்தில் அவரை யாராலும் அடக்க முடியவில்லை. அதேசமயம் சில கமர்ஷியல் படங்களிலும் விஜய்சேதுபதி நடிக்க தயங்குவதில்லை.

அப்படி இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டிஎஸ்பி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி.

அந்த படத்தின் கதை உருவாக்கம், திரைக்கதையில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாகவும் படம் பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இன்னும் குறிப்பாக அந்த படம் ஒரு சில வருடங்களாக இடைவெளி விட்டுவிட்டு எடுக்கப்பட்ட காரணத்தினால் அந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு போலீஸ் அதிகாரிக்கு தேவையான கட்டுமஸ்தான உடற்கட்டுடன் இல்லாமல் காட்சியளிப்பதும் ரசிகர்கள் விஜய்சேதுபதி மீது விமர்சனம் வைக்க காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் திகைத்துப்போய் இது விஜய்சேதுபதி தானா என கேட்கும் விதமாக ஆளே சுத்தமாக மாறிப்போயுள்ள விஜய்சேதுபதி தன்னுடைய புதிய புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் அவர் ரொம்பவே ஸ்லிம் ஆக காணப்படுகிறார். இதன் மூலம் தனது உடல் எடை விமர்சித்தவர்களுக்கு இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு விஜய்சேதுபதி பதிலடி கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.