பாகுபலி படத்திற்கு முன்னதாகவே மகதீரா மற்றும் நான் ஈ ஆகிய படங்கள் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் இயக்குனர் ராஜமவுலி. அதைத்தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவான பாகுபலி திரைப்படம் அவருக்கு மட்டுமல்லாமல் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த பிரபாஸுக்கும் சேர்த்து சர்வதேச அளவில் புகழை தேடித்தந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்த வருடத்தில் வெளியான முதல் டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
அதுமட்டுமல்ல சமீபத்தில் இயக்குனர் ராஜமவுலி, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார்,
இதற்காக வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மெகாஸ்டார் பிரபாஸ் அவரை வாழ்த்தி இணையத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் , “ராஜமவுலி இந்த உலகையே வெல்லப்போகிறார். சிறந்த இயக்குனருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குனருக்கான LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளை (ரன்னர் அப்) பெற்றதற்கும் அவருக்கு வாழ்த்துகள்.
சிறந்த இசையமைப்பாளருக்கான LA ஃபிலிம்ஸ் விமர்சகர்கள் விருதுகளைப் பெற்றதற்காக புகழ்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என பதிவிட்டுள்ளார்.
பிரபாஸின் வாழ்த்துக்களை தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குனர் ராஜமவுலி, “தேங்க்யூ டார்லிங்… என்னுடைய சர்வதேச அங்கீகாரத்தை நானே நம்பாத போது நீங்கள் நம்பினீர்கள் என்று தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்