V4UMEDIA
HomeNewsKollywoodசேதுபதியை ஓவர்டேக் செய்வாரா டிஎஸ்பி ?

சேதுபதியை ஓவர்டேக் செய்வாரா டிஎஸ்பி ?

விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் சேதுபதி. அருண்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் முதன்முதலாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய்சேதுபதி. ஒவ்வொரு ஹீரோக்களின் திரையுலக பயணத்திலும் அவர்களது போலீஸ் படம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும். வழக்கமான பாணியில் இருந்து விலகி வித்தியாசமாக உருவான இந்த சேதுபதி திரைப்படம் விஜய்சேதுபதிக்கும் மிகப்பெரிய செல்வாக்கை பெற்றுத்தந்தது.

இந்த நிலையில் சில வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்சேதுபதி மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார். சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

எப்போதுமே ஒரு ஹீரோவின் முதல் போலீஸ் படம் வெற்றி பெற்றால் அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் சாதனையுடன் அவரது அடுத்த போலீஸ் படத்தையும் ஒப்பிடுவது ரசிகர்கள் இயல்பாக செய்யும் ஒன்றுதான். அந்த வகையில் விஜய் சேதுபதி நடித்த சேதுபதி படத்தை இந்த டிஎஸ்பி படம் ஓவர் டேக் செய்யுமா என்கிற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

விஜய் சேதுபதியின் திரையுலக பயணத்திற்கு வலுவான அஸ்திவாரம் போட்டு அவர் வெற்றிகரமாக பயணிக்க உறுதுணையாக இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Most Popular

Recent Comments