துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட ஏழு நகரங்களை ஒன்றிணைத்துள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டில் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும் வசிக்க கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின.
இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை ஒவ்வொரு குறிப்பிட்ட துறையில் சாதித்த வெகு சிலருக்கு மட்டுமே வழங்கி வருகிறது ஐக்கிய அரபு அமீரக அரசு. அந்தவகையில் இந்த கோல்டன் விசா நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், பார்த்திபன், ஏ ஆர் ரகுமான், மீராஜாஸ்மின் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சமீபத்தில் இந்த கோல்டன் விசா விருது நடிகை குஷ்புவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை நேரிலேயே சென்று பெற்றுக் கொண்ட நடிகை குஷ்பு இந்த விருது பெற்ற விசா பெற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்


























