டைட்டிலை பார்த்ததும் ஏதோ குத்துச்சண்டைக்கு தயாராகிறார் டாக்டர் ராஜசேகரின் மகள் எனது நினைத்துவிட வேண்டாம். எண்பதுகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஜீவிதா. அதேசமயத்தில் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் டாக்டர் ராஜசேகர். இந்த ஜோடியின் மூத்த மகள் தான் ஷிவானி ராஜசேகர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியான அன்பறிவு படத்தில் இரண்டு வேடங்களில் நடித்த ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்தவர்களில் ஒருவர் தான் ஷிவானி ராஜசேகர். ஆனால் இவரது கவனம் தற்போது சினிமாவில் விட மாடலிங் மற்றும் அழகிப்போட்டியில் தான் இருக்கிறது என்பதை சமீப காலமாக வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

அந்த வகையில் மிஸ் இந்தியா போட்டியில் தமிழகம் சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 30, 2022 அன்று அவர் ஃபெமினா மிஸ் இந்தியா தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதில் அனைவரின் கவனத்தை ஈர்த்த வகையில் இப்போது, அவர் மிஸ் இந்தியா கிரீடத்திற்காக போட்டியிடும் முதல் 31 போட்டியாளர்களில் ஒருவராக போட்டியிடவுள்ளார்..


























