V4UMEDIA
HomeNewsBollywoodசூப்பர்ஸ்டார் ரஜினியை ஹிந்தியில் அறிமுகப்படுத்திய பழம்பெரும் தயாரிப்பாளர் காலமானார்

சூப்பர்ஸ்டார் ரஜினியை ஹிந்தியில் அறிமுகப்படுத்திய பழம்பெரும் தயாரிப்பாளர் காலமானார்

தெலுங்கு மற்றும் இந்தியில் கிட்டத்தட்ட 70 படங்களை இயக்கியவரும் பல வெற்றி படங்களை தயாரித்தவருமான மூத்த இயக்குனர் தயாரிப்பாளர் டி.ராமாராவ் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். 83 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.

இவர் தெலுங்கில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், சோபன்பாபு, பாலகிருஷ்ணா, ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த படங்களை இயக்கியும் தயாரித்தும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.

அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இந்தியில் அந்தா காணுன் என்கிற படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.

அது மட்டுமல்ல இன்றைய தலைமுறைக்கு தெரியும் விதமாக விஜய் நடித்த யூத், விக்ரம் நடித்த தில், அருள், ஜெயம் ரவி நடித்த சம்திங் சம்திங், விஷால் நடித்த மலைக்கோட்டை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களையும் இவர்தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments