V4UMEDIA
HomeNewsKollywoodநாய்களிடம் மாட்டிக்கொண்டு தப்பிக்க போராடும் ஆண்ட்ரியா

நாய்களிடம் மாட்டிக்கொண்டு தப்பிக்க போராடும் ஆண்ட்ரியா

மனிதர்கள், அவர்களுக்கு இடையேயான போட்டி பொறாமைகள், இதனால் அவர்களுக்குள் உருவாகும் சண்டை சச்சரவுகள், அவற்றிலிருந்து ஒருவருக்கொருவர் தப்பிக்கவும் அடுத்தவரை தாக்கவும் போடும் திட்டங்கள் என வழக்கமாக பார்த்து சலித்த கதைகலில் இருந்து சற்றே வித்தியாசமாக நாய்களிடையே மாட்டிக்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடும் ஒரு புதிய கதையில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

ஆம் நோ என்ட்ரி என்கிற படத்தின் கதை முழுக்க முழுக்க இப்படித்தான் உருவாகியுள்ளதாம். சுற்றுலாவுக்காக மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சிக்கு செல்லும் ஒரு ஜோடி அங்கே காட்டுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள ஒரு மூங்கில் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

அப்போது மனிதர்களை வேட்டையாடும் நாய் கூட்டத்திடம் மாட்டிக்கொள்ளும் அந்த ஜோடி அங்கிருந்து எப்படி தப்பிக்கிறது என்பதுதான் இந்த படத்தின் மொத்த கதையும். இந்தப் படத்தில் நடித்துள்ள நாய்களுக்கு 25 நாட்கள் சிறப்பு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளார்கள்.

ஆண்ட்ரியாவை பொறுத்தவரை அவர் நிஜத்திலும் நாய்களை நேசிப்பவர் என்பதால் எந்த ஒரு இடத்திலும் பயமில்லாமல் இந்த நாய்களுடன் இணைந்து எளிதாக நடித்துள்ளாராம்.

இந்த படத்தை அழகு கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார்  இதுவரையில் தமிழ் சினிமாவில் இல்லாத ஒரு புது அனுபவத்தை இந்தப் படம் தரும் என்பது இந்த கதையை பற்றி கேட்கும்போதே நன்றாக தெரிகிறது.

Most Popular

Recent Comments