கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. பாண்டவர் அணி சார்பாக விஷால், நாசர் கார்த்தி, கருணாஸ் உள்ளிட்டோர் தலைமையில் ஒரு அணியும் இயக்குனர் பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர்.
ஆனால் இந்த தேர்தல் நடைபெற்று முடிந்தபின் அதில் குளறுபடி நடந்து இருப்பதாக கூறி பாக்யராஜ் அணியினர் பிரச்சினை செய்ததால் இதில் நீதிமன்றம் தலையிட்டு தேர்தல் செல்லாது என அறிவித்தது. அதை தொடர்ந்து நாசர் அணியினர் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டு தேர்தல் செல்லும் என வாதிட்டு வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து நடந்து முடிந்த தேர்தல் செல்லும் என்றும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
ஆரம்பம் முதலே பாண்டவர் அணி முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில் இந்த தேர்தலில் பாண்டவர் அணியில் தலைமைப் பொறுப்புக்கு போட்டியிட்டவர்கள் மட்டுமல்லாது உறுப்பினர்கள் அனைவருமே மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு முன்பும் நடைபெற்ற தேர்தலில் பாண்டவர் அணி மிகப்பெரிய ஆதரவுடன் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.