HomeNewsKollywoodகாதல் திருமணம்தான் உறுதி செய்த ஆதி

காதல் திருமணம்தான் உறுதி செய்த ஆதி

தமிழ் சினிமாவில் அழகும் இளமையும் துடிப்பும் கொண்டவர் நடிகர் ஆதி. சமீபத்தில் விளையாட்டை மையப்படுத்தி உருவாகி இருந்த கிளாப் என்கிற படத்தில் நடித்திருந்தார் ஆதி. ஒடிடி தளத்தில் வெளியான இந்தப்படம் ஆதிக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிக்கும் போது தனக்கு கிடைத்த அனுபவம் மற்றும் தனது திருமணம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் ஆதி.

ஒரு கால் இல்லாத ஊனமுற்ற ஒரு விளையாட்டு வீரனாக நடித்தபோது மிகப்பெரிய சவாலாக இருந்தது. விளையாட்டு வீரர்கள் தினசரி பயிற்சி மேற்கொள்வது, அவர்கள் தங்களது சாப்பாட்டு முறையையே மாற்றிக்கொண்டு தங்களை கடினமாக வருத்திக்கொள்ளுவதைப் பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது.அவர்கள் 365 நாட்களும் பயிற்சி செய்கிறார்கள். அதனால்தான் ஒலிம்பிக்கில் அவர்கள் தோற்றுவிட்டால் அந்த வலி மிகவும் கொடுமையானதாக இருக்கிறது.

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில், எனக்கு வசதியாக தோன்றும் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தால் தான் வெறும் போலீஸ் கதாபாத்திரத்தில் மட்டும்தான் நடித்துக் கொண்டே இருப்பேன். ஆனால் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. அதனால்தான் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகிவரும் வாரியர் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தபோது உடனே ஒப்புக்கொண்டேன். அதுமட்டுமல்ல அடுத்ததாக பார்ட்னர் என்கிற படத்தில் முழுக்க முழுக்க காமெடிக் காட்சிகளில் நடித்துள்ளேன். எனது திருமணத்தை பற்றி பலரும் கேட்கிறார்கள். விரைவில் எனது திருமணம் நடக்கும். அது காதல் திருமணமாக இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கும் என்று கூறியுள்ளார் ஆதி.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments