தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். சமீபத்தில் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக மிகப்பெரிய தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் உறவினரும் கூட. கடந்த இரண்டு வருடங்களாக ஓடிடி தளங்கள் திரைப்படங்களை வெளியிடுவதில் முன்னிலை வகித்து வருகின்றன. அதனை மனதில் கொண்டு ஆஹா என்கிற ஓடிடி தளத்தை முதலில் தெலுங்கில் துவங்கிய அல்லு அரவிந்த் தற்போது அதன் எல்லையை விரிவு படுத்தும் விதமாக தமிழிலும் ஆஹா ஓடிடி தளத்தை துவங்க இருக்கிறார் அல்லு அரவிந்த். இதற்கான தொடக்க விழா வரும் தமிழ் புத்தாண்டு அன்று நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார் அல்லு அரவிந்த்.