V4UMEDIA
HomeNewsKollywoodநீ என்ன பண்றன்னா... மகனுக்கு தங்கர்பச்சான் சொன்ன கீதோபதேசம்

நீ என்ன பண்றன்னா… மகனுக்கு தங்கர்பச்சான் சொன்ன கீதோபதேசம்

வெற்றிகரமான ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இயக்குனர் தங்கர்பச்சான், தனது மகன் விஜித் பச்சானை இந்த இரண்டு துறைகளில் அல்லாமல் மகன் விரும்பியபடி நடிப்புத்துறையில் களமிறக்கி உள்ளார். அவரை ஹீரோவாக வைத்து டக்கு முக்கு டிக்கு தாளம் என்கிற படத்தை இயக்கியுள்ளார் தங்கர்பச்சான். இந்தப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது புதுப்புது தகவல்களை தெரிவித்து வருகிறார் தங்கர்பச்சான்.

பணம் இருப்பவனுக்கு நிம்மதி இல்லை.. பணம் இல்லாதவனுக்கு அதை தேடித்தேடியே வாழ்க்கையை சரியாக வாழ முடியவில்லை. ஒரு கட்டத்தில் பணம் இவர்களை குறி வைக்கிறது என்கிற கருத்தை மையப்படுத்தி தான் இந்த படத்தை இயக்கி உள்ளாராம் தங்கர்பச்சான்.

அதுமட்டுமல்ல தனது மகனிடம், “நம் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் கட்டட தொழிலாளி, சாலை பணியாளர், துப்புரவுத் தொழிலாளி இவர்களின் குழந்தைகளும் நல்ல வாழ்வு வாழ வேண்டும். உன்னுடைய வருமானத்தில் பத்து சதவீதத்தை அவர்களுக்காக ஒதுக்கி விடு” என்று கீதோபதேசம் செய்துள்ளார் தங்கர்பச்சான்.

Most Popular

Recent Comments