HomeNewsKollywoodஆர்ஆர்ஆர் படத்திற்கு ஆந்திர அரசு வழங்கிய சிறப்பு சலுகை

ஆர்ஆர்ஆர் படத்திற்கு ஆந்திர அரசு வழங்கிய சிறப்பு சலுகை

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இணைந்து நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். அஜய்தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

கடந்த மாதம் வரை ஆந்திர மாநில திரையரங்குகளில் கட்டண கெடுபிடி காரணமாக பெரிய படங்கள் தாங்கள் போட்ட முதலீட்டை எடுப்பதற்கு சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து சிரஞ்சீவி, மகேஷ்பாபு, ராஜமவுலி உள்ளிட்ட பிரபலங்கள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் நேரில் சென்று இதுகுறித்து தங்களது கோரிக்கைகளை வைத்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திர அரசு தியேட்டர் கட்டணங்களை உயர்த்தி, தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பயன் கிடைக்குமாறு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் 100 கோடி பட்ஜெட்டுக்கு மேல் எடுக்கப்படும் படங்கள் முதல் பத்து நாளைக்கு திரையரங்கு உரிமையாளர்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் அந்த படங்கள் குறைந்தபட்சம் முப்பது சதவீதமாவது ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இந்த சலுகை இனிவரும் படங்களுக்கு தான் என்றும் அதில் சொல்லப்பட்டிருந்தது. .

இந்தநிலையில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் முதல்வரை நேரில் சந்தித்து இந்த படம் இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல ஆந்திராவில் கிட்டத்தட்ட 70 சதவீத படப்பிடிப்பிற்கு மேல் நடத்தியுள்ளோம் மேலும் ஆந்திர மண்ணில் பிறந்து சுதந்திரத்திற்காக போராடிய இரண்டு வீரர்களின் பெருமையைத்தான் இந்த படம் பேசுகிறது. அதனால் இந்த படத்திற்கும் அரசு அறிவித்த சலுகை கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து ஆந்திர முதல்வர் ஆர்ஆர்ஆர் படத்திற்கும் முதல் பத்து நாட்கள் கட்டணங்களை திரையரங்கு உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments