HomeNewsKollywoodவிஜய்யின் குரலில் தத்துவ பாடலாக வெளியான ஜாலியோ ஜிம்கானா

விஜய்யின் குரலில் தத்துவ பாடலாக வெளியான ஜாலியோ ஜிம்கானா

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தில் கடந்த மாதம் வெளியான அரபிக்குத்து பாடலுக்கு ஒரு ஆட்டம் ஆடி தீர்த்துவிட்ட ரசிகர்கள் அடுத்ததாக வெளியாக இருக்கும் ஜாலியோ ஜிம்கானா பாடலை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் இந்த பாடல் இன்று மாலை வெளியானது. வெளியான 15 நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களால் இந்தப்பாடல் பார்க்கப்பட்டு அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது.

அனிருத் இசையில் இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார் என்பது தான் ஹைலைட்டே. இந்தப்பாடல் அதிரடியான குத்து பாடலாக இருக்கும் என எதிர்பார்த்தால், இது அருமையான ஒரு தத்துவ பாடலாக, சோர்ந்து போனவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் முன்னேற்ற பாடலாக உருவாகியுள்ளது.

அதேசமயம் இந்த பாடலில் நடனத்திற்கும் குறைவிருக்காது என உணர்த்துவது போல விஜய், பூஜா ஹெக்டே இருவரின் நடன காட்சிகளையும் முந்தைய பாடல் போல இதிலும் சில நொடிகள் இணைத்துள்ளார்கள். அந்தவகையில் அரபிக்குத்து பாடலுக்கு இணையாக இந்த பாடலும் வரவேற்பை பெறும் என்பது உறுதி.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments