பிரசாந்த் நடிப்பில் ஜானி படம் வெளியான பிறகு, அடுத்த படம் வெளிவருவதற்கு ஒரு மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது என்றே சொல்லலாம். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே அவர் நடிக்கும் அந்தகன் என்கிற படத்தில் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து படத்தின் வேலைகளும் துவங்கிவிட்டன./. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக இந்த கால தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதூன் என்கிற படத்தைத்தான் தமிழில் அந்தகன் என்கிற பெயரில் ரீமேக் செய்து இயக்கியுள்ளார் பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதே படத்தின் மலையாளம் மற்றும் தெலுங்கு ரீமேக் அந்தகன் படத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு ரிலீசும் ஆகிவிட்டன.
இந்தநிலையில் அந்தகன் படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை கலைப்புலி தாணு பெற்றுள்ளார்.


























