பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் பல தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரபல தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி.
மேலும் இவர் தெலுங்கு சினிமா நடிகர் சங்கத்தின் முன் திடீரென அரை நிர்வாணமாக உட்கார்ந்து தனக்கு நீதி வேண்டும் என போராட்டம் நடத்தியது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ் இயக்கும் படம் உள்பட ஒரு சில படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை படத்தை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக கடந்த 1980களில், 1990களில்ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ்பெற்ற நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தான் நடிக்க இருப்பதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் சில்க் ஸ்மிதா கேரக்டரில் தான் நடிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் முழு விவரங்களை விரைவில் தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.