மம்மூட்டி நடிக்க உள்ள பீஷ்ம பர்வம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்று வருகிறது.
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரும், இப்போது இருக்கும் நடிகர்களில் மூத்தவருமான மம்மூட்டி கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 200 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இப்போது அவர் நடிக்க உள்ள பீஷ்ம பர்வம் படத்தின் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பார்ப்பதற்கு காலா படத்தின் போஸ்டர் போலவே வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த படமும் ஒரு கேங்ஸ்டர் படம்தானாம். இந்த படத்தை இயக்குனர் அமல் நீரத் இயக்குகிறார்.