HomeNewsKollywoodபூஜையுடன் தொடங்கிய விமல் படம் !!

பூஜையுடன் தொடங்கிய விமல் படம் !!

விமல் நடிக்கும் படம் ஒன்றின் பூஜை நேற்று (ஜனவரி 25) சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் நாயகியாக பிரபல முன்னணி நடிகை இணைந்துள்ளார்.​
“குட்டிப்புலி” சரவண சக்தி என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் நாயகியாக நடிக்க தன்யா ஹோப் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் ஏற்கனவே தடம், தாராள பிரபு என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தன்யா ஹோப் மருத்துவ கல்லூரியில் படிக்கும் பெண்ணாக நடிக்கிறார்.

இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று நடந்த நிலையில் சென்னை மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருப்பதாகவும் இந்த படம் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்திற்கு திரைக்கதை விஜய் சேதுபதி எழுதியுள்ளார்

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments