HomeNewsKollywoodபுதிதாய் மலர்ந்திருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் "GREEN CINEMAS" !

புதிதாய் மலர்ந்திருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் “GREEN CINEMAS” !

தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா அவர்களின் Studio Green Films நிறுவனம் பல்லாண்டுகளாக மதிப்புமிகு படைப்புகளை, தரமான படங்களை தயாரித்து, வழங்கி, மற்றும் விநியோகித்தும் வருகிறது. தென்னிந்திய திரையுலகில் மதிப்புமிக்க தயாரிப்பாளர்களுள் ஒருவராக வலம்வரும் K.E. ஞானவேல் ராஜா 2021 ஆண்டிலும் பல ஆச்சர்யகராமான படைப்புகளை தயாரித்து வரிசையாக வெளியிட காத்திருக்கிறார். தயாரிப்பு உலகில் பெரும் வெற்றியை கண்டிருக்கும் அவர் தற்போது புதியதொரு பயணத்தை தொடங்கியிருக்கிறார். Green Cinemas எனும் பெயரில் தொடர் தியேட்டர் குழுமமாக விரைவில் பரிமளிக்க போகும் வகையில் பாடி ராதா (சென்னை) யில் முதல் திரையரங்கை துவங்கியுள்ளார்.


New Cinema Theatre 'Green Cinemas' Opened at Padi - www.mykollywood.com

Green Cinemas சார்பில் K.E. ஞானவேல் ராஜா கூறியதாவது…
சாய் நல்லாசியோடு GREEN CINEMAS குழுமம் சார்பில் எங்களின் முதல் திரையரங்கை பாடியில் (அண்ணா நகர் அருகில்)
GREEN CINEMAS – PADI RADHA எனும் பெயரில் துவங்கியுள்ளோம். இரண்டு திரைகள் கொண்ட இந்த திரையரங்கில் ஒன்று 384 இருக்கைகளுடனும் மற்றது 142 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரையரங்கு தற்காலத்திய அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 4K Projection ATMOS Sound மற்றும் 3D Projection கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் மிகச்சிறப்பான திரை அனுபவத்தை பெரும் வகையில் மிக விலாசமான ஹால், மிகப்பெரிய இடம் கொண்ட கழிவறை வசதி, சுகாதாரம் பேணும் வகையிலான திண்டபண்டங்கள், குளிர் பானங்கள் கொண்ட உணவகம் இத்திரையரங்கில் அமைந்துள்ளது. GREEN CINEMAS உடைய முக்கிய குறிக்கோள் ரசிகர்கள் இந்த பொதுமுடக்க காலத்தில் மிகப்பாதுகாப்பான உணர்வுடன் ஒரு கொண்டாட்டமான அனுபவத்தை பெற செய்வதென்பதே ஆகும். எங்களது இந்த புதிய பயணத்திற்கு உங்களின் ஆதரவையும் அன்பையும் வேண்டுகிறேன் நன்றி.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments