V4UMEDIA
HomeNewsKollywoodபொங்கலன்று சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் வெளியான "புலிக்குத்தி பாண்டி" !!

பொங்கலன்று சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் வெளியான “புலிக்குத்தி பாண்டி” !!

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் முத்தையா. இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெறும். குறிப்பாக தாய்மார்களை இவரது படங்கள் கவரும். சசிக்குமார் நடித்த குட்டிப் புலி, கார்த்தி நடித்த கொம்பன், விஷால் நடித்த மருது மற்றும் கௌதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் ஆகிய படங்கள் தென் மாவட்டங்களில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும் தென் தமிழக மாவட்டங்களில் முத்தையா படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன.

இந்நிலையில் அவர் நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனதிற்காக இயக்கி வருகிறார். நீண்டு நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இந்த படம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் சன் நெக்ஸ்ட் தளம் மற்றும் சன் டிவியில் பொங்கல் அன்று மாலை நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு “புலிக்குத்தி பாண்டி” என பெயரிடப்பட்டுள்ளது.


Image


இந்நிலையில் இன்று இப்படத்தின் டீசரை சன் டிவி வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Most Popular

Recent Comments