கடந்த 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது வெற்றியாளர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சினிமாவில் சிறப்பான பங்களிப்பு கொடுத்த கலைஞர்களுக்கு இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் தாதாசாகேப் பால்கே விருது வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர்களான அஜித், தனுஷ், பார்த்திபன், ஜோதிகா உள்ளிட்டோர் இந்த விருதை வென்றுள்ளனர்.
அதன்படி…
சிறந்த நடிகர் விருது: தனுஷ் ( திரைப்படம்:அசுரன்)
சிறந்த படம்: டூ லெட்
சிறந்த நடிகை: ஜோதிகா ( திரைப்படம்: ராட்சசி)
சிறந்த இயக்குநர்: ஆர்.பார்த்திபன் ( திரைப்படம்: ஒத்தசெருப்பு சைஸ் 7)
சிறந்த இசையமைப்பாளர்: அனிருத்
பன்முகத்திறமை வாய்ந்த நடிகர்: அஜித்குமார்
ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.