இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருப்பினும், பாமர மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த தொற்றின் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
சமீபத்தில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, அர்ஜுன் கபூர், மலைகா அரோரா, ஜெனிலியா , சிரஞ்சீவி,ரகுல் பரீட் சிங் ,ராம்சரண், ராஜமெளலி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பிரபல ஹிந்தி பட இயக்குனர் ஆனந்த் எல் ராய் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் . இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “எனக்குகொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில தினங்களில் என்னை சந்திவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவர் சமீபத்தில் நடிகர் தனுசுடன் அத்ரங்கி ரே’ படத்தை இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது