லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு இப்படத்தின் ரிலீஸ் திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் இருக்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கண்டிப்பாக பொங்கல் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.
மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை பெரிய ரீச்.
இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என பெரிய குழப்பமே இருந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு இயக்குனர் லோகேஷ் பிரத்யோக பேட்டி கொடுத்துள்ளார். அதில் “தளபதி விஜய் சார் தான் ஒரு நாள், ‘நீ எங்க எல்லாரையும் நடிக்கச் சொல்லி டார்ச்சர் பண்றல நீயும் ஒரு சீன்ல நடிக்கணும்’னு சொன்னார். நானும் முதல்ல சும்மா விளையாட்டுக்கு தான் சொல்றார் போல் அப்புறம் மறந்திடுவார்னு நினைச்சேன். கரெக்ட்டா கடைசி நாள் ஷூட்ல அதை ஞாபகம் வெச்சிருந்து, ஒரு சீனில் நடிக்க சொல்லி சொன்னார். ‘நான் நடிக்கணும்னா, அந்த சீனை நீங்க தான் டைரக்ட் செய்யணும்ன்னு சொன்னேன். இப்படி சொன்னா விட்ருவாருன்னு நினைச்சேன், ஆனால், ‘பண்ணிட்டா போச்சு’ன்னார். அப்பறம் தளபதி விஜய் சார் ஆக்ஷன், கட் சொல்லி, நான் நடிச்சேன்”. என கூறியுள்ளார்.