HomeNewsKollywoodசசிகுமார் நடிக்கும் "பகைவனுக்கு அருள்வாய்" படத்தின் போஸ்டர் வெளியீடு!

சசிகுமார் நடிக்கும் “பகைவனுக்கு அருள்வாய்” படத்தின் போஸ்டர் வெளியீடு!

தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமின்றி உச்ச நட்சத்திரமாகவும் வலம் வருகிறார் சசிகுமார். பிஸியாக படங்கள் ஹிட் ஆனதால் தொடர்ந்து நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் நடிப்பில் கொம்பு வச்ச சிங்கமடா, ராஜவம்சம், பரமகுரு, எம்ஜிஆர் மகன் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ’பகைவனுக்கு அருள்வாய்’ என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அனிஸ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ‘திருமணம் என்னும் நிக்கா’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.

Image

இந்த படத்தில் சசிகுமாரோடு வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 80 களின் ஸ்டைலில் நீண்ட முடி மற்றும் அந்த காலத்தில் இளைஞர்கள் பயன்படுத்திய உடைகளோடு சசிகுமார் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments