V4UMEDIA
HomeNewsKollywoodசிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபனின் ஒத்த செருப்பு !

சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபனின் ஒத்த செருப்பு !



நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‛ஒத்த செருப்பு’. இப்படத்தின் சிறப்பு அம்சம் அவர் மட்டுமே நடித்துள்ளார். ஒரு அறைக்குள் நடக்கும் கதை ஒத்த செருப்பு .

ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்படும் பார்த்திபன். போலீசின் விசாரணை அறைக்குள் சந்திக்கும் பிரச்சினைகள் பேசும் படம் . கொலைக்கு ஆதாராமாக இருப்பது ஒத்த செருப்பு. பார்த்திபன் கொலையாளியா, இல்லையா என்பது கிளைமாக்ஸ்.


தற்போது இந்த படத்தை உலக படவிழாக்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறார் பார்த்திபன். முதல்கட்டமாக வருகிற 30ந் தேதி சிங்கப்பூரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ஒத்த செருப்பு திரையிடப்படுகிறது. இந்த விழாவில் இந்தியா, பூடான், இலங்கை, பாகிஸ்தான் சிங்கப்பூர், பங்களாதேஷ் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளின் பட்டியலில் உள்ள 45 படங்களுடன் ஒத்த செருப்பும் 7 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

Most Popular

Recent Comments