மிர்ச்சி சிவா நடிப்பில் டைரக்டர் ஹோசிமின் இயக்கும் படம் ‘சுமோ’. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தை ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்தில் முதல் முறையாக மிர்ச்சி சிவா திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். அண்மையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியானது.
இதை தொடர்ந்து நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பாடகர் பிரேம்ஜி அமரன் இது குறித்து ட்விட்டரில் ட்வீட் செய்தார். இதற்கு நன்றி தெரிவித்த அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி ஷிவா “நன்றி சார்… நான் கேள்வி பட்டது உண்மையா” என மறுடுவீட் செய்துள்ளார்.
நடிகர் பிரேம்ஜி அமரன் திருமணம் செய்துகொள்வதாக வதந்திகள் வந்தது, இவர் இணையத்தில் ஒரு படத்தை வெளியிட்டபோது, அதில் அவர் டி-ஷர்ட்டில் ‘கேம் ஓவர்’ என ஒரு திருமணமான தம்பதியினரின் படம் இருந்தது. அந்த டுவீட்டிற்கு பதிலளிக்கும் விதமாக, பிரேம்ஜி, அவர் ஒரு “மொரட்டு சிங்கிள்”, என்று பதிவிட்டார். இருவரும் சென்னை -28 தொடர் படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர்.