தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா ஷிரோட்கர், ஒரு காலத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர். ஐவரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்கள் இணைந்து நடித்த முதல் படம் ‘வஸ்தவ்’ இதன் தொடர்ச்சியாக ‘ஹத்யார்’ படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர்.
சஞ்சய் தத் பற்றி பேசும்போது நம்ரதா புன்னகையுடன், “அவருக்கு இப்போது 60 வயதா? நேரம் எப்படி செல்கிறது. நான் எப்போதும் சஞ்சுவை ஒரு குழந்தையாக தான் பார்ப்பேன், மிகவும் மென்மையாவர், நல்ல மனிதர். எப்போதும் எனக்கு பிடித்த ஹீரோ அவர்தான். அவர் எனக்கு மிகவும் பிடித்த சக நடிகர்களில் ஒருவரும் கூட”என்று அவர் கூறினார்.
நம்ரதா அவர்களின் ஏழு ஆண்டுகள் பாலிவுட் வாழ்க்கையில், நம்ரதா தனது சக நடிகர்களுடன் அந்த அளவிற்கு பழகவில்லை, ஆனால் அவர் நினைவு கூர்ந்தது சஞ்சய் தத் மட்டுமே.
“காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை ஷூட்டிங் செட்களுக்குள் இருப்பதாகிவிடும். ஆனால் எனக்கு சஞ்சயுடன் ஒரு நல்ல நட்பு இருந்தது. நான் அவரை மிகவும் துணிச்சலான மற்றும் பாதுகாப்பான இணை நட்சத்திரமாக நினைவு கூர்கிறேன். நாங்கள் படம் எடுக்கும் போதெல்லாம், அவர் என் பெண் குழு உறுப்பினர்களையும் என்னையும் கவனிப்பார். கூட்டம் மிக அருகில் வரவில்லை என்பதை அவர் உறுதி செய்வார். எனது பாதுகாப்பு குறித்து அவ்வளவு அக்கறை கொண்ட இவரை போல் வேறு எந்த துணை நடிகர், நடிகர் அல்லது குழுவினரிடமிருந்த யாரையும் நான் நினைவில் கொள்ளவில்லை, ”என்று அவர் கூறுகிறார்.
உண்மையில், சஞ்சயுடன் அவர் மிகவும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் உணர்ந்ததாகவும், மகேஷ் பாபுவுடனான தனது உறவைப் பற்றி தெரிந்து கொண்ட ஒரே நடிகர் அவர்தான் என்றும் கூறினார். “மகேஷைப் பற்றி நான் சஞ்சுவிடம் தெரிவித்தேன். அனைவரின் முன்பும் அவர் மகேஷைப் பற்றி மறைமுகமாக என்னிடம் பேசி கேலி செய்வார்”என்று அவர் அன்புடன் நினைவு கூர்ந்தார்.
நடிகர் சஞ்சய் தத் தற்போது கே.ஜி.எஃப் :2 படத்தில் ‘ஆதிரா’ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்