மறைந்த யதார்த்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் நினைவைப் பற்றிப் பேசுகிற நூல் ‘சொல்லித் தந்த வானம்’ . இந்த நூலை அருள்செல்வன் பலரது அனுபவங்களைத் தொகுத்து எழுதி இருக்கிறார். இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு தென் இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க அலுவலகத்தில் இன்று எளிமையாக நடைபெற்றது .அப்போது நூலை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட, இயக்குநர் யார் கண்ணன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் இயக்குநர்கள் மனோஜ் குமார், மனோபாலா, ரமேஷ் கண்ணா, ஏ.வெங்கடேஷ் ,சண்முகசுந்தரம், லியாகத் அலிகான், சி.ரங்கநாதன், யுரேகா ,கவிஞர் விவேகா ,பின்னணிக் குரல் கலைஞர் ஹேமமாலினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.