நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘காப்பான்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் ‘சூரரை போற்று’.
இந்த நிலையில் ‘சூரரை போற்று” படத்தின் ஓபனிங் பாடலை செந்தில் கணேஷ் பாடியிருக்கிறார், இந்த பாடலை ஏகாதேசி என்ற பாடலாசிரியர் எழுதி இருக்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் இது குறித்து தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. இவர் ஏற்கனவே பாடிய ‘சின்ன மச்சான்’ பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார் மேலும் ஜாக்கி ஷெராப்,பரேஷ் ராவல், கருணாஸ், மோகன் பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.