தளபதி விஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்தை எழுதி இயக்குபவர் அட்லீ. இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவரும் மூன்றாவது படம் இது. இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார், கதிர், விவேக், இந்துஜா, ரெபா மோனிகா ஜான், டேனியல் பாலாஜி, யோகி பாபு, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கியமான துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். பெண்களை போற்றும் விதமாக இருக்கும் இந்த பாடலுக்கு அநேக பிரபலங்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே. விஷ்ணுவும், இசை இயக்குநராக ஏ.ஆர்.ரஹ்மானும் இசையமைத்துள்ளார்.
‘சிங்கப்பெண்ணே’ பாடலை ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஷாஷா திருப்பதி பாடியுள்ளனர். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். இந்த பாடல் 5 மில்லியன் வியூஸை தாண்டி சென்றுள்ளது.
சமந்தா இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “எப்பொழுதும் சரியாக செய்யும் இந்த அணியை எப்போதும் நம்புங்கள்” என்று எழுதினார், மேலும் இந்த படத்தின் முக்கிய நபர்களான தளபதி விஜய், இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இயக்குனர் அட்லீக்கு நன்றி தெரிவித்தார்.