‘பெல்லி சூபுலு’, ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ போன்ற படங்களின் மூலம் தனது அற்புதமான நடிப்பால் விஜய் தேவர்கொண்டா பார்வையாளர்களின் இதயங்களில் அழியாத இடத்தை பிடித்துக்கொண்டார். ஆனந்த் சங்கர் இயக்கிய அரசியல் த்ரில்லர் ‘நோட்டா’ வில் இவர் தமிழில் கடைசியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், இது இவரின் கோலிவுட் அறிமுகமாகும்.
விஜய் தேவர்கொண்டா-ரஷ்மிகா மந்தண்ணா நடித்த “டியர் காம்ரேட்” படத்திற்கு தணிக்கைக்குழு யு / ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. 2 மணிநேர 49 நிமிடங்கள் தயாராகியிருக்கும் இந்த படத்தை பாரத் கம்மா எழுதி இயக்கியிருக்கிறார். ‘டியர் காம்ரேட்’ வெளியீட்டிற்கு தற்போது இவர் தயாராகி வருகிறார். நடிகை ரஷ்மிகா மந்தன்னா கதாநாயகியாக நடித்துள்ளார், இவர் முன்பு கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக இணைந்து பணியாற்றியிருக்கிறார்.இப்படம் ஜூலை 26 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
தொழில்நுட்ப முன்னணியில், மித்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பிக் பென் சினிமாஸ் நவீன் யெர்னேனி, ஒய் ரவிசங்கர், மோகன் செருகுரி மற்றும் யஷ் ரங்கினேனி ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசையை ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து சுஜித் சாரங் படமாக்கியுள்ளார்.