HomeNewsKollywoodசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் பிரபலங்கள்!!

சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் பிரபலங்கள்!!

சூர்யா அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் புதிய கல்வி கொள்கை குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இவரின் கருத்துக்களுக்கு ஆளும்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் இவருடைய கருத்துக்களுக்கு உலகநாயகன் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் உலகநாயகனை அடுத்து இயக்குனர் பா. ரஞ்சித் சூர்யாவின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது, “புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர், பெண்கள், மாணவர்கள் எதிர்காலம் குறித்தும் சிந்தித்தும், பேசியும் செயல்பட்டும் வரும் சூர்யாவுக்கு நாம் துணை நிற்போம்” என்று பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments