V4UMEDIA
HomeNewsKollywoodஜூலையில் வெளியாகிறது சந்தானத்தின் "அக்யுஸ்ட் நம்பர் 1"!!

ஜூலையில் வெளியாகிறது சந்தானத்தின் “அக்யுஸ்ட் நம்பர் 1”!!

Image result for a1 movie posters

காமெடியனாக இருந்து நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவரது படங்கள் மற்ற படங்களை விட சற்று மாறுபட்டதாக இருக்கும். சந்தானம் தற்போது இயக்குனர் ஜோத்ன்சொன் இயக்கியுள்ள “A1” படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்து வெளிவர இருக்கும் முதல் படம் இது. மேலும் சந்தானம் படங்களில் நகைச்சுவைக்கு குறை இருக்காது, அந்த வரிசையில் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர்களாகிய மொட்ட ராஜேந்திரன் , மனோகர் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சந்தானம் அவர்களின் படத்தின் தலைப்புகளுக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுக்க படம். இவர் நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘தில்லுக்கு துட்டு’ என படத்தின் பெயர்கள் வித்யாசமாக இருக்கும். இந்த படத்தின் பெயரும் அதுபோன்றே வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஜூலை 26ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Most Popular

Recent Comments