‘துருவங்கள் பதினாறு” படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தற்போது ‘மாஃபியா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாகவும், பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாகவும், பிரசன்னா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியது. அனேக வரவேற்பை பெற்ற இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரித்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் வில்லனாக நடிக்கும் பிரசன்னாவின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது லைக்கா நிறுவனம்.
இந்த போஸ்டரில் பிரசன்ன மிகவும் மாஸ் ஆன வில்லனாக தோற்றமளிக்கிறார். தற்போதுள்ள சினிமா துறையில் அழகிய வில்லன்களின் வருகை அதிகரித்துள்ளது. வில்லன்களின் தோற்றங்கள் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக அமைக்க படுகிறது. அழகிய வில்லன்களின் வரிசையில் இடம் பெற்ற “அருண் விஜய்” கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு பிரசன்னா அழகிய வில்லனாக வரவிருக்கிறார்.