‘ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2’ படத்தில் அறிமுகமான சங்கி பாண்டேவின் அன்பு மகள் அனன்யா, ஒரு நட்சத்திரமாக இருப்பதன் நன்மை தீமைகள் இரண்டையும் பார்த்திருக்கிறார். பாலிவுட் புதுமுகம் அனன்யா பாண்டே மற்றும் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நெருங்கிய நண்பர்கள். சுஹானா நகரத்தில் இருக்கும்போதெல்லாம் அவர்கள் ஒன்றாகத் வெளியி. செல்வது வழக்கம். ஒரு பொழுதுபோக்கு போர்ட்டலுடன் பேசும்போது அனன்யா பாண்டே, தான் சுஹானாவிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக வெளிப்படுத்தினார்.
உரையாடலின் போது, நடிகை சுஹானாவுடனான தனது நட்பை பற்றி மனம் திறந்தார் அனன்யா பாண்டே, “நான் சுஹானாவுடன் பள்ளியில் நிறைய நாடகங்களில் நடித்துள்ளேன். சுஹானா ஒரு நல்ல நடிகை அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் எதுவும் அவருக்கு கற்றுக்கொடுக்கவில்லை, அவரிடமிருந்து தான் நான் நிறைய கற்றுக்கொண்டேன்” என விவரித்தார்.
அனன்யா தனது இரண்டாவது படமான ‘பதி பட்னி அவுர் வோ’வின் படப்பிடிப்பில் இருந்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக் ஆர்யன் மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோரும் நடிக்கின்றனர்.