சசிகுமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநய, கஞ்சா கருப்பு என நட்சத்திர பட்டாளமாக நடித்து 2009 ஆம் ஆண்டில் வெளியான படம் ‘நாடோடிகள்’ இந்த படம் திரைக்கு வந்து மக்களின் அதீத வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தொடர்ச்சியாக ‘நாடோடிகள் 2’ படத்தை எடுத்தனர் , இந்த படம் பிப்ரவரியில் வெளியிடப்படவிருந்தது. இப்போது, இந்த ஆண்டு ஜூலை மாதம் படம் திரைக்கு வரும் என்றும், டீஸர் விரைவில் வெளியிடப்படும் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் சசிகுமார் மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சினி, சூப்பர் சுப்பாராயண், அதுல்யா ரவி, பரணி மற்றும் பலர் நடிக்கின்றனர். ‘நாடோடிகள் 2’ வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருக்கும், முதல் பகுதி விட்டுச்சென்ற இடத்திலிருந்து தொடராது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், என்.கே. படத்தின் ஆடியோ ஆல்பமும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது