சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் மும்பையில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு நேற்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த் , விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
குடிநீர் பிரச்சினையில் தவிக்கும் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ள எனது ரசிகர்களை மிகவும் பாராட்டுகிறேன். அவர்கள் செய்வது மிகவும் நல்ல விஷயம். நாங்கள் செய்யும் நல்ல விஷயங்கள் இப்போதுதான் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. மழை வருவதற்கு முன்பே ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த பணிகள் எல்லாம் போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டும்.
நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க முடியாதது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏதோ தவறு நடந்திருக்கிறது. என்றார்.