வி.செல்வசேகரன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘வெண்ணிலா கபடி குழு 2’. இந்த படம் கபடி விளையாட்டை மையமாக கொண்டு எடுத்த படமாகும். இந்த படத்தின் முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் மற்றும் சரண்யா மோகன் ஆகியோருடன் சூரி, கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கினார். இந்த படம் மக்களிடையே அதீத வரவேற்பைப் பெற்றதுடன், நகைச்சுவை நடிகருக்கு ‘பரோட்டா’ சூரி பட்டத்தையும் பெற்று தந்தது . விஜய் சேதுபதியும் இப்படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.
தற்போது இரண்டாம் பாகமான இந்த படத்தில் விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கிறார், மேலும் இந்த படத்தில் சூரி, கிஷோர்
அர்த்தனா, சந்தோஷ், பசுபதி, கஞ்சா கருப்பு, ரவி மரியா, அப்புகுட்டி என பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு வி.செல்வகனேஷ் இசையமைக்கிறார், சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிப்பில் ஏ.பூங்கவனம் மற்றும் என்.அனந்த் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் டீஸர் நேற்று வெளியானது, இந்த டீஸர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகம் போலவே இந்த படமும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கும் அளவிற்கு டீசரை காண்பித்துள்ளனர்.