HomeNewsKollywood'பொன்னியன் செல்வன்' வெப் சீரிஸை தயாரிக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்

‘பொன்னியன் செல்வன்’ வெப் சீரிஸை தயாரிக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகளும் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் “கோச்சடையான்” மற்றும் “வேலையில்லா பட்டதாரி 2” படத்தை இயக்கியவர். இவர் அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க உள்ளார். பிரபல இயக்குனர்கள் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க முயற்சித்துள்ளனர். தற்போது சௌந்தர்யா அவர்கள் பொன்னியின் செல்வன் கதையை வெப் சீரிஸ் ஆக எடுக்க போவதாக தனது டுவிட்டரில் பதிவிட்டார். 

அவர் அந்த டுவிட்டர் பதிவில், “பொன்னியன் செல்வன் – இது EPIC. நான் அதை தயாரிக்க வேண்டும் மற்றும் அதை சரியாக செய்ய வேண்டும். ஆரம்ப வேலை அனைத்து தெளிவுடனும் செய்யப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன். நிச்சயமாக அனைத்து தகவல்களும் பதிவிடப்படும், கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார் !!! #WorkingToSeePonniyinSelvanOnTheDigitalScreenSoon. “


இந்தத் தொடரின் தயாரிப்பாளர் சௌந்தர்யா, மே6th என்டேர்டைன்மெண்ட் உடன் இணைந்து தயாரிக்கவுள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments