கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற வெற்றி படங்களை தயாரிக்கும் வரிசையில் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘வாழ்’ இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார், இந்த படத்தை ஷெல்லி ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரேமண்ட் டெரிக் கிராஸ்டா எடிட்டிங் செய்கிறார். எஸ்கே ப்ரோடக்ஷன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மதுரம் பிக்சர்ஸ் கலையரசு இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் அவரகள் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார், அவர் அந்த டுவிட்டரில், ” எனது அப்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிடுகிறோம், அவ்ருடைய ஆசிர்வாதத்துடன் எஸ்கே ப்ரோடக்ஷனின் மூன்றவது படம் இது, இந்த படத்தை என் அன்பு தம்பி அருண் பிரபு இயக்குகிறார்” என பதிவிட்டுள்ளார்.