Review By :- V4U Media
Release Date :- 31/01/2020
Movie Run Time :- 2.16 Hrs
Censor certificate :- U/A
Production :- Madras Enterprises
Director :- Samuthirakani
Music Director :- Justin Prabhakaran
Cast :- Sasikumar, Athulya, Anjali, Bharani, Namo Narayanan
சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் போராளிகள் சசிகுமார், அஞ்சலி, பரணி. சசிகுமார் க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் அவரது பெற்றோர், அதுல்யாவை திருமணம் செய்து கொள்கிறார். முதலிரவில் அதுல்யா தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். ஏன் தற்கொலை முயற்சி செய்கிறார் ? சசிகுமார் என்ன முடிவு எடுத்தார் ? எடுத்த முடிவில் சசிகுமார் வெற்றி பெற்றரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை .
சசிகுமார் வழக்கம் போல தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். அஞ்சலி, அதுல்யா, பரணி தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். ஜாதியால் இன்றும் நம் நாட்டில் நடக்கும் கொடுமைகளை மிகவும் எதார்த்தமாக சொல்லியுள்ளார் இயக்குனர் சமுத்திரக்கனி.
முதல் பாகத்தில் பெரிய ஹிட்டான “சம்போ சிவசம்பபோ” பாடல் இந்த படத்தில் வரும் இடம் அனைவரலையும் ரசிக்கப்படும். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் & பின்னணி இசை தரம். படத்தின் முதல் அரை மணிநேரம் திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்கிறது, அதன்பின் விறுவிறுப்பாக கதை செல்கிறது.
சசிகுமார் – சமுத்திரக்கனி “வெற்றி கூட்டணி” என மீண்டும் நிரூபித்து விட்டனர்.