ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி.எஸ்.அகோரம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், ‘தளபதி’விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா முன்னரே சென்று இருந்தது. சென்ற வாரம் ‘தளபதி’விஜய் படக்குழுவுடன் இணைந்து கொண்டார்.
தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் ரஷ்யாவில் இருந்து படப்பிடிப்பிற்கு நடுவில் ‘தளபதி’விஜய் அவர்கள் ஜாலியாக சிறுவர்கள் ஓட்டும் சிறிய ரக சைக்கிளை ஓட்டி மகிழ்ந்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களுடன் மகிழ்ச்சியாக செலவிட்ட தருணங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.