‘தனுஷ்’ நடிக்கும் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று முதல் துவங்கியுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்கள் மூலம் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் தயாரிக்க, சோனாலி நரங் வழங்க, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார்.
ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். நாகர்ஜுனா அக்கினேனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இப்படத்துக்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.ராமகிருஷ்ணா சபானி மற்றும் மோனிகா நிகோத்ரே ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பைக் கவனிக்கிறார்கள்.சர்வதேச சண்டைப் பயிற்சி இயக்குநரான யானிக் பென் இப்படத்தில் பணியாற்றுகிறார்.

நடிகர் ‘தனுஷ்’ படப்பிடிப்பிற்காக விமானத்தில் ஹைதராபாத் செல்லும்பொழுது, அவருடைய ரசிகர்கள் ‘செல்பி’புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.


























