V4UMEDIA
HomeUncategorizedமா.பொ.சி முதல் தோற்றம் இன்று மாலை வெளியானது!

மா.பொ.சி முதல் தோற்றம் இன்று மாலை வெளியானது!

மா.பொ.சி திரைப்படத்தில் விமல் கதாநாயகனாகவும் சாயாதேவி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். சாயாதேவி பிரபல இயக்குனர் ‘யார்’ கண்ணன் அவர்களின் மகள் ஆவார்.

இத்திரைப்படத்தை எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிராஜ்.எஸ் மற்றும் நிலோஃபர் சிராஜ் இருவரும் தயாரிக்கின்றனர்.

நடிகர் மற்றும் இயக்குனர் ‘போஸ்’வெங்கட் திரைப்படத்தின் கதை,திரைக்கதை எழுதி இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு இனியன்.ஜே.ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு மற்றும் நிற வடிவமைப்பு வேலைகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொள்கிறார். சண்டை பயிற்சி இயக்குனராக விமல் ராம்போவும் நடன இயக்குனராக தினேஷ் அவர்களும் பணியாற்றுகின்றனர்.

சுகுணா திவாகர் வசனம் எழுத, விவேகா, ‘ஆத்தங்குடி’ இளையராஜா, ‘இளங்கனி’அருண் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர்.

இத்திரைப்படத்தை கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் வாங்கி வெளியிடுகிறார்.

இத்திரைப்படத்தின் முதல் தோற்றத்தை ‘மக்கள்செல்வன்’விஜய் சேதுபதி, ‘கன்னட சூப்பர்ஸ்டார்’சிவராஜ் குமார், மலையாள நடிகர் மற்றும் இயக்குனர் லால் ஜோஸ், தமிழ்த்திரை உலகின் முன்னணி இயக்குனர்களான சமுத்திரக்கனி,மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித் அவர்கள் இன்று மாலை தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

Most Popular

Recent Comments