நடிகர் மம்முட்டியின் மகனாக வாரிசு நடிகர் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் மட்டும் தனது எல்லையை சுருக்கி விடாமல் தந்தையை போன்றே தமிழிலும் காலூன்றிய அவர் அதைத்தொடர்ந்து தெலுங்கு, இந்தி என தற்போது ஒரு பான் இந்தியா நடிகராக வளர்ந்து விட்டார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் கிங் ஆப் கொத்த என்கிற திரைப்படம் வெளியானது இந்த நிலையில் தெலுங்கில் தற்போது லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான்.
கடந்த ஜனவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி தான் இந்த படத்தை இயக்குகிறார்.
கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். சமீபத்தில் இந்தப்படம் பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது.