கடந்த 20 வருடங்களாக கமர்சியல் படங்களை கொடுப்பதில் முன்னணியில் இருந்து வந்தவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். ஆனால் கடைசியாக அவர் இயக்கிய ஸ்பைடர், சர்க்கார், தர்பார் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற தவறின. இதனை தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு சரியான சமயம் பார்த்து காத்திருந்தார் ஏ.ஆர் முருகதாஸ்.
அவர் சிவகார்த்திகேயனை வைத்து தனது புதிய படத்தை இயக்கப் போவதாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ஏ.ஆர். முருகதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு தான் சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
சிவகார்த்திகேயனும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இருவரும் இணையும் படம் விரைவில் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.