இயக்குனர் சேரன் நடிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தமிழ்க்குடிமகன். இந்தப்படம் வரும் செப்டம்பர் எட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கிராமங்களில் எவ்வளவு தான் நாகரீகம் வளர்ந்தாலும் ஒடுக்கப்பட்டவர்கள் படித்து முன்னேறி பல பதவிகளை நோக்கி சென்றாலும் இன்னும் அவர்கள் தங்கள் குலத்தொழிலை செய்ய நிர்பந்திக்கப்படுவதை மையப்படுத்தி, அதற்கு ஒரு தீர்வு சொல்லும் விதமாக இந்தப்படம் உருவாகி உள்ளது
சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் திரையுலக முக்கியஸ்தர்கள் பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு, அருமையான கதை அம்சம் கொண்ட படம் என்று பாராட்டி உள்ளனர். அதே சமயம் இதே தேதியில் தமிழிலேயே கிட்டத்தட்ட ஐந்து ஆறு படங்களுக்கு மேல் வெளியாகின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் ஒரு சுனாமி போல் அடித்துச் செல்லும் விதமாக ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் வெளியாகிறது.
திரையரங்குகள் பெரும்பாலும் ஜவான் படத்திற்கு தான் முன்னுரிமை கொடுத்து அதிக காட்சிகளை வெளியிடுகின்றன. இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்களுக்கு இயக்குனர்/நடிகர் சேரன் வேண்டுகோள்: ஒன்றை வைத்துள்ளார்.
அதாவது, “தமிழ்க்குடிமகன் நல்ல திரைப்படம் என பார்த்த நண்பர்கள் பாராட்டுகிறார்கள்.. பத்திரிக்கைகளில் 3.5/5, 3/5 என படத்தின் ரேட்டிங் கொடுக்கிறார்கள்.. நீண்ட நாட்களுக்கு பின் அனைவரும் கதை ரீதியாக பாராட்டும் படமாக இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படம் வெளியிட திரையரங்குகளும் காட்சிகளும் குறைவாகவே கிடைக்கிறது.. பிறகு எப்படி சிறந்த படங்கள் மக்களுக்கு சென்றடையும்..?
எனவே திரையரங்க உரிமையாளர்கள் சிறந்த நல்ல வரவேற்பு இருக்கும் திரைப்படங்களுக்கும் காட்சிகள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறிய தயாரிப்பாளர்களும் நல்ல திரைப்படங்களும் மக்களிடம் செல்ல வழி செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார் சேரன்
பிறகு எப்படி சிறந்த படங்கள் மக்களுக்கு சென்றடையும்.. எனவே திரையரங்க உரிமையாளர்கள் சிறந்த நல்ல வரவேற்பு இருக்கும் திரைப்படங்களுக்கும் காட்சிகள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறிய தயாரிப்பாளர்களும் நல்ல திரைப்படங்களும் மக்களிடம் செல்ல வழி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சேரன்