V4UMEDIA
HomeNewsKollywoodசரியாக 100 நாட்கள் ; கேப்டன் மில்லர் கவுண்ட் டவுன் ஆரம்பம் 

சரியாக 100 நாட்கள் ; கேப்டன் மில்லர் கவுண்ட் டவுன் ஆரம்பம் 

தனுஷ்  நடிப்பில் அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் படம்  கேப்டன் மில்லர். ராக்கி, சாணிக்காயிதம் என விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க முக்கிய வேடங்களில் நடிகர் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர், இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து விட்டது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி  உள்ளது.

இந்த படம்  கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமாக வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றிலிருந்து இந்த படம் சரியாக  100   நாட்களில்  வெளியாவதை தொடர்ந்து உற்சாக கவுண்ட் டவுன்  ஆரம்பமாகியுள்ளது. சத்தியஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Most Popular

Recent Comments