லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் தற்போது அமெரிக்கா சென்றுள்ளனர்.
காரணம் விஜய் நடிக்க உள்ள படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார் என்றும் அப்பா மகன் கதாபாத்திரங்களில் தான் அவர் நடிக்கிறார் என்றும் அதில் அவரது இளமை கதாபாத்திரத்திற்காக இன்னும் இளமை தோற்றத்தை கொண்டு வருவதற்காக அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளார்களாம்.
அந்த சோதனைக்காக தான் தற்போது அமெரிக்கா சென்று உள்ளார்கள். இந்தியன் படத்தில் கமலின் இளமை தோற்றம் கூட இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.